மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள் | தினகரன்

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள்

ந.தே. முன்னணி தவிசாளர் சிறாஜ் மசூர்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிறாஜ் மசூர் தெரிவித்தார். 

 இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மாகாண சபைத் தேர்தலைத் துரிதமாக நடத்துவதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட புதிய தேர்தல் முறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால், பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துமாறும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடிப்பது ஜனநாயக விரோத செயல் என்பதை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அனைவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...