Thursday, April 25, 2024
Home » பொதுமேடைகளுக்கு இனிமேல் விஜயகாந்த் வரப் போவதில்லை!

பொதுமேடைகளுக்கு இனிமேல் விஜயகாந்த் வரப் போவதில்லை!

by sachintha
December 15, 2023 1:00 am 0 comment

அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்!

நடிகர் விஜயகாந்த் இனிமேல் பொதுமேடைகளுக்கு வர மாட்டார். அவர் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்க வாய்ப்பு உள்ளதாக தே.மு.தி.க கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தே.மு.தி.கவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக தெரிவு செய்து தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் பொதுமேடைகளுக்கு வர மாட்டார் என்பதுடன், கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவே மாட்டார் என்றும் கூறப்படுகிறது. அவர் கட்சியில் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். அவர் பொதுமேடைகளுக்கு வரவே வாய்ப்புகள் இல்லை. அவர் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. அதனால் இனி அவர் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார்.

அவர் இனிவரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் நிகழ்வு, சினிமா நிகழ்வு எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வெளியேறினார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அவரின் உடல்நிலை குறித்து மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது, மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது, அதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT