Friday, March 29, 2024
Home » லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் 2024 இஸ்லாமிய நாட்காட்டி விநியோகம்

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் 2024 இஸ்லாமிய நாட்காட்டி விநியோகம்

- விடை பெற்றுச் செல்லும் உறுப்பினர்கள் கௌரவிப்பும்

by Rizwan Segu Mohideen
December 14, 2023 5:33 pm 0 comment

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய நாட்காட்டி வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் புதன்கிழமை (13) இடம்பெற்றது. இதற்கு அமானா வங்கி மற்றும் தாருல் இமான் நிறுவகம் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன.

குறித்த நிகழ்வில், விடை பெற்றுச் சென்ற மஜ்லிஸ் உறுப்பினர்களான எம்.ஏ. அமீனுல்லா மற்றும் எம்.எம். பிர்தௌஸ் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எம்.எஸ். பாஹிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செயலாளர் றிஸ்வான் சேகு முகைதீன், பொருளாளர் எம்.என்.ஏ. றிஸ்வான் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மஜ்லிஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தினகரன் மற்றும் வாரமஞ்சரி ஆசிரியர் தே. செந்தில் வேலவருக்கு, லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் இஸ்லாமிய நாட்காட்டியின் பிரதியொன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT