கிரிக்ெகட்டில் அக்கரைப்பற்று றீபில் பீ, உதைபந்தில் விநாயகபுரம் அணிகள் சம்பியன் | தினகரன்

கிரிக்ெகட்டில் அக்கரைப்பற்று றீபில் பீ, உதைபந்தில் விநாயகபுரம் அணிகள் சம்பியன்

திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகம் தனது 40வது ஆண்டு நிறையொட்டி நடாத்திய மென்பந்து கிரிக்கெட், மற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று றீபில் பீ அணியும், விநாயகபுரம் மின்னொளி ஏ அணியும் சம்பியனாக தெரிவாகியிருந்தன.

திருக்கோவில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40வது ஆண்டு நிறைவையொட்டி நாடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 45 கிரிக்கெட் அணிகளும், 35உதைபந்தாட்ட அணிகளும் சுற்றுப் போட்டிகளில் பங்கு கொண்டு இருந்தன.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் அண்மையில் கழகத்தின் தலைவர் டி.சுரோந்திரன் தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிச் சுற்றுப் போட்டியில் கிரிக்கெட் இறுதிச் சுற்றுக்கு அக்கரைப்பற்று றீபில் பீ அணியும், விநாயகபுரம் மின்னொளி அணியும் மோதிக் கொண்டது.

இவ் சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது இதன்போது மின்னொளி கிரிக்கெட் அணியானது ஆறு ஓவர் முடிவில் 51 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று றீபில் பீ அணி 52 ஓட்ட இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வேளை 5.3 ஓவர் முடிவில் 52 ஓட்டங்களை பெற்று விநாயகபுரம் மின்னொளி அணியை விழ்த்தி அக்கரைப்பற்று றீபில் பீ அணி அமரர் வேலாயுதம் இரத்தினம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தினையும் 17000 ரூபா பணப்பரிசில்களையும் வெற்றி கொண்ட அதேவேளை விநாயகபுரம் மின்னொளி அணி 12000 பணப்பரிசிலளையும், ரணசப் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டன.

இத் தொடரில் இடம்பெற்ற 35 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு கழத்தின் ஏ அணியும், பீ அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்துடன் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று ஏதிர்த்து மோதிக் கொண்டதில் ஏ அணி பீ அணியினை 2க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் மின்னொளி ஏ அணி சம்பியனாக தெரிவாகியதுடன் அமரர் தங்கராசா சோதிமலர் ஞாபபார்த்த வெற்றிக் கிண்ணத்தினையும் 15000ரூபா பணப்பரிசில்களையும் தட்டிச் சென்றதுடன் பி அணிக்கு 10000 ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

இவ் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் , தவிசாளர் இ.வி.கமலராஜன், வலயக்கல்விப் பணிப்பளர் வை.ஜெயசந்திரன், தென்கிழக்கு பல்கலைக் கழக முகாமைத்துவ பீடாதிபதி எஸ்.குணபாலன், மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் ,உப தவிசாளர் எஸ்.விக்னேஸ்வரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் அரச,தனியார் நிறுவன அதிகாரிகள், விளையாட்டு கழங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர் 

 


Add new comment

Or log in with...