மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது | தினகரன்

மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது-Foriegner Arrested with Foriegn Liquor at Batticaloa

50 லீட்டர் மதுபான போத்தல்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபான  போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விற்பனையில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது-Foriegner Arrested with Foriegn Liquor at Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள், நிலையங்களை தடை செய்யும் வகையில்  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி த. தயாலீஸ்வரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது-Foriegner Arrested with Foriegn Liquor at Batticaloa

இதன் கீழ் மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைய  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் மதுவரி அத்தியட்சகர் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் கீழ் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 லீட்டர் வெளிநாட்டு மதுபான  போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், விற்பனையில் ஈடுபட்ட  பிரான்ஸ் நாட்டு பிரஜை  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி த. தயாலீஸ்வரகுமார் தெரிவித்தார்

மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக உத்தியோகத்தர்களினால் கைப்பற்றப்பட்ட மதுபான  போத்தல்களையும்  கைது செய்யப்பட வெளிநாட்டு பிரஜையையும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி  முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது குறித்த நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தார்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...