காணாமல் ஆக்கப்பட்ட வவுனியா உறவுகளுக்கு உலர் உணவு | தினகரன்

காணாமல் ஆக்கப்பட்ட வவுனியா உறவுகளுக்கு உலர் உணவு

காணாமல் ஆக்கப்பட்ட வவுனியா உறவுகளுக்கு உலர் உணவு-Dry Ration to Missing Person-Relations-Vavuniya

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு இன்று (12) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட வவுனியா உறவுகளுக்கு உலர் உணவு-Dry Ration to Missing Person-Relations-Vavuniya

அறம் செய் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆர். ஞானசேகரம், பொருளாலர் செல்வி த. கலைமதி கலந்துகொண்டு போராட்ட களத்தில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகளுக்கு தைத்திருநாளை முன்னிட்டு இவ்வாறு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கிவைத்துள்ளனர்.

கடந்த 691 நாட்களாக வவுனியாவில் தொடர்ந்து சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் உறவுகள் 50 குடும்பங்களின் உறவுகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வைக்கப்பட்டது.

(கோவில்குளம் குறூப் நிருபர் - கந்தன் குணா)


Add new comment

Or log in with...