ராகுல்காந்தி பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து | தினகரன்

ராகுல்காந்தி பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் மீண்டும் பிரதமராக பணிகளை தொடர வாய்ப்புக் கிட்டியமைக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அதனால் உருவான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்ட சவால்கள் ஜனநாயகத்தை நேசிக்கும்

எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. எனினும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கையும், உச்சநீதிமன்ற தீர்ப்பு இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தும் நல்ல முன்மாதிரியை காண்பித்துள்ளது.

அரசியலமைப்பின் உள்ளகத்தகைமை அதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் நீங்கள் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...