நிபுணர் குழு அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை மாற்றும் யோசனை | தினகரன்


நிபுணர் குழு அறிக்கையில் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை மாற்றும் யோசனை

சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் நாட்டிற்குள் புதிய பகுதியொன்றை உருவாக்கவும் பௌத்த மதத்திற்கு வழங்கும் முன்னுரிமையை மாற்றவும் யோசனை முன்வைத்துள்ளதாக தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்தார்.

அரசியிலமைப்பு சபை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நிபுணர்குழுவின் அறிக்கையை திருட்டுத் தனமாக சட்டமூலமாக கொண்டுவர அரசாங்கம் முயன்றது. அதனை நாம் நிராகரித்தோம். இதனையடுத்து 5 இடைக்கால அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தற்பொழுது மீண்டும் நிபுணர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் குழுவிற்கிடையில் உடன்பாடு இருக்கவில்லை. இதில் நகல் சட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதனை மாற்ற வேண்டும். ஏற்கெனவே சட்ட நகல் முன்வைக்காதிருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் நாட்டில் புதிய பகுதியொன்றை உள்வாங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதை மாற்றவும் யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...