தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி | தினகரன்


தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி

தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராக செல்வது வேடிக்கை. ஸ்டாலினுக்கு இப்போது தான் கிராமத்தின் ஞாபகம் வந்திருக்கிறது, கிராமத்தை பார்க்காதவர் ஸ்டாலின்.

அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.

தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும். துரோகம் இழைப்பவர்களுக்கு ஆதரவு தரமாட்டோம் என கூறினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி பழைய நண்பர்களுக்கு கூட்டணி வைப்பதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...