சிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஜிஹாத் போராளிகள் வசமானது | தினகரன்


சிரியாவின் இத்லிப் பிராந்தியம் ஜிஹாத் போராளிகள் வசமானது

சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடுமையான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பிரதான ஜிஹாத் கூட்டணிக்கும் போட்டி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை சிரியாவுக்கான அல் கொய்தாவின் முன்னாள் கிளையின் தலைமையிலான ஹாயத் தஹ்ரிர் அல் ஷாம் மற்றும் துருக்கி ஆதரவு தேசிய விடுதலை முன்னணிக்கு இடையிலான மோதலை உடன் முடிவுக்கு கொண்டுவந்ததாக ஜிஹாதிக்களின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்த நிறுத்தத்தை அடுத்து அண்மைய தினங்களில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் முன்னேற்றம் கண்ட ஜிஹாதிக்கள் தமது கட்டுப்பாட்டு பகுதியை விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்த உடன்படிக்கை மூலம் ஒட்டுமொத்த கிளர்ச்சியாளர் பகுதியும் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் வசமாகி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வட கிழக்கு சிரியாவில் தேசிய விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்களிடம் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கடந்த வாரம் பல கிராமங்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...