விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு | தினகரன்

விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய இரண்டு மாணவிகள் மாவட்ட ,தேசிய விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

சமூகசேவை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாடுப்போட்டி அண்மையில் கொழும்பு சுகாதாதாச விளையாட்டரங்கில் நடை பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விசேட தேவை பிரிவிலிருந்து தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றிய எஸ்.சங்கீர்த்தனா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று அம்பாறை மாவட்டத்துக்கும் உவெஸ்லி கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

இதேவேளை அதே கல்லூரியை சேர்ந்த விசேட தேவையுடைய மாணவி எஸ்.இந்துமதி மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்திலும், உயரம் பாய்தலிலும் பங்கு பற்றி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மடத்தில் 4வது இடத்தையும் பெற்றுள்ளார் .

சாதனை புரிந்த இந்த இரண்டு விசேட தேவையுள்ள மாணவிகளையும், அவர்களை போட்டிகளில் பங்குபற்ற தயார் படுத்திய ஆசிரியர்களான திருமதி ஆர்.எம். மரியராஜ் வாஸ் மற்றும் எம்.றிஸ்மி ஆகியோரையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

நற்பிட்டிமுனை விசேட நிருபர்


Add new comment

Or log in with...