பாகிஸ்தான் அணி அறிவிப்பு | தினகரன்

பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. இதில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடர் முடிவடைந்தவுடன் அடுத்ததாக பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கிடையில் இத்தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி விபரத்தை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணி இறுதியாக விளையாடிய அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரில் இடம்பெறாத அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல, துடுப்பாட்ட சகலதுறை வீரரான ஹூசைன் தாலட் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெறுகிறார். மேலும், ஷான் மசூத் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் சமான், ஹசன் ஹலி, ஹூசைன் தாலட், இமாட் வசிம், இமாம் உல் ஹக், மொஹமட் ஆமீர், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ரிஸ்வான், சதாப் கான், சயீன் அப்ரிடி, ஷான் மசூத், சொயிப் மலிக், உஸ்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி போர்ட் எலிசெபத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...