தென்ஆபிரிக்க அணியின் தலைவராக டீன் எல்கர் | தினகரன்

தென்ஆபிரிக்க அணியின் தலைவராக டீன் எல்கர்

பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான தென்ஆபிரிக்க அணியின் பொறுப்பு தலைவராக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது தென்ஆபிரிக்க அணி மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், தென்ஆபிரிக்க தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தார்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் தென்ஆபிரிக்க அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் கடைசி டெஸ்டுக்கான தென்ஆபிரிக்க அணியின் பொறுப்பு தலைவராக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலது கால் தொடையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் அவதிப்படுவதால், அதை கருத்தில் கொண்டு புதுமுக துடுப்பாட்ட வீரர் பீட்டர் மாலன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...