நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு | தினகரன்


நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு

நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு-Petrol Auto Diesel Price Reduced by Rs 2-Super Diesel By Rs 3-Midnight Today-Jan 10 2018 Fuel

எரிபொருள் விலை சூத்திரத்திற்க அமைய, எரிபொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையில் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.

இதன்போது பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனாலும் ஒட்டோ டீசலின் விலை ரூபா 5 இனாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலிய (CPC) கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 125 இலிருந்து ரூபா 123 ஆக ரூபா 2 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 149 இலிருந்து ரூபா 147 ஆக ரூபா 2 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 101 இலிருந்து ரூபா 99 ஆக ரூபா 2 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 121 இலிருந்து ரூபா 118 ஆக ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

IOC பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல்

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (22) முதல் அமுலாகும் வகையில், ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 2 இனாலும்> சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 133 இலிருந்து ரூபா 131 ஆக ரூபா 2 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 152 இலிருந்து ரூபா 150 ஆக ரூபா 2 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 101 இலிருந்து ரூபா 99 ஆக ரூபா 2 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 121 இலிருந்து ரூபா 118 ஆக ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...