ரெஜினோல்ட் குரே ஆபரண அதிகாரசபை தலைவராக நியமனம் | தினகரன்

ரெஜினோல்ட் குரே ஆபரண அதிகாரசபை தலைவராக நியமனம்

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் அரச மரக் கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்துக்கும் சப்ரகமுவ மாகாணத்துக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டதையடுத்தே முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் நிலூகா ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி மேற்படி புதிய பதவிகளை வழங்கியுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே மற்றும் நிலூகா ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்கவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடதக்கது.


Add new comment

Or log in with...