இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு ஆளுநர் ராகவனால் நியமனம் | தினகரன்

இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு ஆளுநர் ராகவனால் நியமனம்

இரணைமடு குளத்தினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா? மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற வடக்கு , கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன மற்றும் ஆளுநரின் சிபாரிசுக்கமைய மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...