Thursday, March 28, 2024
Home » கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக விராட் சாதனை

கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக விராட் சாதனை

- கூகுளின் 25 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்டவை; காணொளி வெளியீடு

by Prashahini
December 14, 2023 10:48 am 0 comment

கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதன் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

தற்போது இன்டர்நெட் என்றாலே கூகுள் என்று அனைவரும் கருதும் அளவிற்கு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் கொண்டு வந்து கொடுக்கிறது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களில் அதிகமாக மக்களால் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் பற்றி கூகுள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

விராட் கோலி கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக விளையாடி 80 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அதேபோல IPL தொடரிலும் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக சாதனை படைத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் கடந்த 25 வருடத்தில் டோனி, சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், முரளிதரன், வார்னே போன்ற சிறந்த வீரர்களை காட்டிலும் அதிகமாக இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வீரராக சாதனை படைத்துள்ளது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்தில் மற்றுமொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT