எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு; பாராளுமன்றில் பிரதமர் | தினகரன்


எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு; பாராளுமன்றில் பிரதமர்

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு; பாராளுமன்றில் பிரதமர்-Fuel Price Reduced From Midnight Today; PM Ranil at Parliament

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனாலும் ஒட்டோ டீசலின் விலை ரூபா 5 இனாலும் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இதனை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (22) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக பதவியேற்றதை அடுத்து, கடந்த நவம்பர் 03 ஆம் திகதி மற்றும் நவம்பர் 16 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலிய (CPC) கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 135 இலிருந்து ரூபா 125 ஆக ரூபா 10 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 159 இலிருந்து ரூபா 149 ஆக ரூபா 10 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 106 இலிருந்து ரூபா 101 ஆக ரூபா 5 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 131 இலிருந்து ரூபா 121 ஆக ரூபா 10 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது. (11.08am)

IOC பெற்றோல், டீசல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமுல் (UPDATE)

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு (22) முதல் அமுலாகும் வகையில், ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 10 இனாலும் ஒட்டோ டீசலின் விலை ரூபா 5 இனாலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 143 இலிருந்து ரூபா 133 ஆக ரூபா 10 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 162 இலிருந்து ரூபா 152 ஆக ரூபா 10 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 106 இலிருந்து ரூபா 101 ஆக ரூபா 5 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 131 இலிருந்து ரூபா 121 ஆக ரூபா 10 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...