தலிபான் –அமெரிக்கா அமைதி பேச்சு ரத்து | தினகரன்

தலிபான் –அமெரிக்கா அமைதி பேச்சு ரத்து

கட்டாரில் நேற்று ஆரம்பமாகவிருந்த அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நரலில் இணக்கம் ஏற்படாததால் அந்த பேச்சுவார்த்தை ரத்துச் செய்யப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கான் அதிகாரிகளின் தொடர்பு அதேபோன்று யுத்த நிறுத்தம் மற்றும் கைதிகள் பரமாற்றம் தொடர்பில் முரண்பாடு இருந்ததாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து தலிபான்கள் முன்னதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கான் அரச அதிகாரிகள் பங்கேற்பதை அவர்கள் நிராகரித்துள்ளனர். எனினும் இந்தப் பேச்சுவார்த்தை ரத்துச் செய்யப்பட்டது குறித்து ஆப்கானுக்கான அமெரிக்க தூதரகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.


Add new comment

Or log in with...