Tuesday, April 23, 2024
Home » இலங்கை-எகிப்து பாராளுமன்ற சங்கச் செயலாளராக பிரதி சபாநாயகர்

இலங்கை-எகிப்து பாராளுமன்ற சங்கச் செயலாளராக பிரதி சபாநாயகர்

by gayan
December 14, 2023 7:15 am 0 comment

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலங்கை, எகிப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நட்புறவுச் சங்கம் அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் முன்மொழிந்தார்.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உறுதி செய்தார். இலங்கை-எகி ப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்த சங்கத்தின் உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரவிந்தகுமார், ஹெக்டர் அப்புஹாமி. மதுர விதானகே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துணைச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலும் நியமிக்கப்பட்டனர்.

இலங்கை எகிப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்.

பிரதி செயற் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், திலான் பெரேரா, ஏ.எச்.எம். ஃபௌசி, ரவூப் ஹக்கீம், குமாரசிறி ரத்நாயக்க, மஞ்சுளா திஸாநாயக்க, வேலு குமார், யாதாமினி குணவர்தன, குணதிலக ராஜபக்ஷ, ராமேஸ்வரன் ராஜேந்திரன், ஜகத் குமார சுமித்ரா ஆராச்சி, உதயண கிரிந்திகொட, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, நாலக பண்டார கோட்டேகொட, வருண லியனகே, மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, வீரசுமண வீரசிங்க, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஏ. அடைக்கலநாதன், மஞ்சு லலித் வர்ண குமார, ஜயந்த வீரசிங்க.

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகள் கடந்த காலம் தொட்டு காணப்படுவதாகவும், 66 வருட இராஜதந்திர உறவுகள் கடந்துள்ள இவ்வேளையில், தாம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT