Friday, April 19, 2024
Home » இறக்குமதியான 06 மில்லியன் முட்டைகள் சந்தையில் விற்பனை

இறக்குமதியான 06 மில்லியன் முட்டைகள் சந்தையில் விற்பனை

by gayan
December 14, 2023 6:40 am 0 comment

இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு நேற்றும் (13) இன்றும் (14) சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை அரச வர்த்தக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்யும் வாய்ப்புள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சதொசவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT