Home » மின் கட்டணங்கள் ஜனவரி நடுப்பகுதியில் திருத்தப்படும்

மின் கட்டணங்கள் ஜனவரி நடுப்பகுதியில் திருத்தப்படும்

போதியளவு மழைவீழ்ச்சி கிடைத்ததால் பலன்

by gayan
December 14, 2023 6:30 am 0 comment

மின்கட்டணங்கள் அடுத்த வருடம்” ஜனவரி மாத நடுப்பகுதியில் மீண்டும் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டில், கடந்த ஆண்டு போதிய அளவு மழை வீழ்ச்சி காணப்படவில்லை. இவ்வருடம் மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், நீர் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலக்கரி தொழிற்சாலை மற்றும் டீசல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைக்க முடிந்துள்ளதால் மின் கட்டணங்கள் குறைவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. இம்மாதம் 31 இல், இருப்பு நிலை அறிக்கைகள் கிடைத்ததும் நுகர்வோர் பயனடையும் வகையில் மிண் கட்டணங்களில் திருத்தம் செய்யப்படும். நீர்மின்சாரத்திலிருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்து.

கடந்த ஆண்டுகளில்,இக்காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால்,இன்றைய நாட்களில் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT