ரூ.1,000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை | தினகரன்


ரூ.1,000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...