ஜாலிய மற்றும் மனைவி, சகோதரிக்கு பிடியாணை | தினகரன்


ஜாலிய மற்றும் மனைவி, சகோதரிக்கு பிடியாணை

ஜாலிய மற்றும் மனைவி, சகோதரிக்கு பிடியாணை-Open Warrant Again Jaliya Wickramasuriya and Wife

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்வது தொடர்பில், கொழும்பு கோட்டை நீதிமன்றம் மீண்டும் திறந்த பிடிஆணையை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (09) கொழும்பு கோட்டை நீதிமன்ற பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் இவ்வாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டதோடு, அவர் சார்பில் பணியாளர்களாக குறிப்பிடப்பட்டிருந்த அவரது மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கும் மீண்டும் பிடியாணைபிறப்பிக்க பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான தூதுவராலயம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்வதில் சுமார் ரூ. 5 கோடி 17 இலட்சம் அரசாங்க நிதி முறையற்ற விதத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...