இராணுவ டிரக்-ஆட்டோ மோதி மூவர் பலி | தினகரன்

இராணுவ டிரக்-ஆட்டோ மோதி மூவர் பலி

இயக்கச்சியில் சம்பவம்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ டிரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர். 

பளையிலிருந்துகிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் நிரப்புவதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியும் நேருக்கு நேர் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளையை சேர்ந்தவர்களான பி.ஜெயக்குமார் (வயது 36), கே. குகதாஸ் (வயது 32) , சுழிபுரம் வட்டுக்கோட்டையை சேர்ந்த எஸ். ரதீஸ்வரன் (வயது 26)  ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸாருடன் கிளிநொச்சி தடயவியல் பொலிஸாரும் மேற்கொண்டனர்.  

(பரந்தன் குறூப், கிளிநொச்சி குறூப் நிருபர்கள்)  


Add new comment

Or log in with...