Friday, March 29, 2024
Home » வர்த்தக சேவை கால்பந்து சங்கத்திற்கு 105 ஆண்டுகள்

வர்த்தக சேவை கால்பந்து சங்கத்திற்கு 105 ஆண்டுகள்

by gayan
December 14, 2023 4:40 pm 0 comment

வர்த்தக சேவை கால்பந்து சங்கத்தின் 105 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கோல்பேஸ் ஹோட்டலில் அந்த சங்கத்தின் அங்கத்தவர்களின் பங்கேற்புடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வர்த்தக சேவை கால்பந்து சங்கத்தின் தலைவர் சாயிப் யூசுப்பின் அழைப்பின் பேரில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஸ்கொட்லாந்து கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைமை செயலாளர் ஸ்டுவட் மைக்கல் ரேகன் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் உட்பட பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

1918 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான கால்பந்து லீக்காக வர்த்தக சேவை கால்பந்து சங்கம் உள்ளது என்று அதன் தலைவர் யூசுப் இதன்போது தெரிவித்தார்.

பிரின்ஸ் குணசேகர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT