சிலுமின இணைய ஆசிரியருக்கு மரண அச்சுறுத்தல் | தினகரன்

சிலுமின இணைய ஆசிரியருக்கு மரண அச்சுறுத்தல்

சிலுமின இணைய ஆசிரியருக்கு மரண அச்சுறுத்தல்-Silumina online editor threatened by SLPP Pradeshiya Sabha Member

சிலுமின பத்திரிகையின் இணைய ஆசிரியர் பிரபுத்தி ரணசிங்கவிற்கு, களனி பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அசுந்த பாரிந்தவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அவர், பேலியகொட பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, அது தொடர்பில் பொலிசார் அவர்கள் இருவரையும் இன்று (08) விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், சந்தேகநபரான குறித்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் நாளைய தினம் (09) முற்பகல் 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்குட்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி களனி ஹிம்புட்டுவெல்கொட சிரில் மெத்திவ் மைதானத்தில் இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தொடர்பில், ஒரு சில விடயங்களை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர் பிரபுத்தி ரணசிங்க தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்த கருத்துகள் காரணமாக ஆத்திரமுற்ற சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர், பிரபுத்தி ரணசிங்கவின் மனைவிக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு சென்று, முறையற்ற விதத்தில் அவரை திட்டியதோடு மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக, அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...