Friday, March 29, 2024
Home » க.பொ.த உயர் தரம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு மருதமுனையில் திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு

க.பொ.த உயர் தரம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு மருதமுனையில் திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு

by gayan
December 14, 2023 3:06 pm 0 comment

கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தியடைந்த க.பொ.த (உ/த) கற்கவிருக்கின்ற மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் கருத்தரங்கு 13.12.20123 அன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இப்பாடசாலையின் அதிபர் ஐ.உபைதுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவின் டீகன் பல்கலைக்கழக கட்டுமான முகாமைத்துவம், விஞ்ஞான,பொறியியல், கட்டுமானத்துறையின் பேராசிரியர் இம்றியாஸ் கமர்த்தீன் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.

இம்ரியாஸ் கமர்தீன் டீகன் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பில்ட் சுற்றுச்சூழலின் பள்ளியில் கட்டுமான நிர்வாகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த இவர் கல்வி மற்றும் தொழில்துறையில் விரிவான அனுபவங்களைக் கொண்ட ஆற்றல்மிக்க கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். மேலும் முன்னணி கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் குழுக்களில் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் மென்மையான திறன்கள், ஆராய்ச்சி, கற்பித்தல் சிறப்புக்காக எட்டு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இவ்வருகையின் போது க.பொ.த உயர்தர முதலாமாண்டு பொறியியல்துறை மாணவனான அப்துல் ரஹீம் முகம்மட் அக்மல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவிருக்கும் ராடர் கருவியையும் பார்வையிட்டு அதற்கான வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். பாடசாலையின் விஞ்ஞான பொறியியல் பகுதியையும் அவர் சென்று பார்வையிட்டார். குறித்த நிகழ்வில் மருதமுனையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

வாஹிட் முகம்மது ஜெஸீல்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT