கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு | தினகரன்

கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

 
வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுக்குள் இறங்கி கற்களை அகற்ற முயற்சித்த நபர் உயிரிழந்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கணேசமூர்த்தி (41) எனும் குடும்பஸ்தர், நேற்று முன்தினம் (07) இரும்பண்ட குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக, நீர் நிறைந்த துரிசுக் கிணற்றினுள்  இறங்கி, கீழிருந்த கற்களை அகற்றிக் கொண்டிருந்த வேளை கிணற்றின் மேலுள்ள துரிசுக் கதவு விழுந்ததன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
உயிரிழந்த நபரின் சடலத்தை கிணற்றுக்குள்ளிருந்து வெளியில் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட கடும் பிரயத்தனத்தின் மூலம், நேற்று  (08) சடலம் மீட்க்கப்பட்டது.
 
சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்வதற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
 
 
கொக்கட்டிச்சோலை பொலிசார் விசாரணைகளைஎ மேற்கொண்டுள்ளனர்.
 
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)
 
 
 

Add new comment

Or log in with...