வயோதிப தம்பதியிடம் 55 பவுண் நகை கொள்ளை | தினகரன்


வயோதிப தம்பதியிடம் 55 பவுண் நகை கொள்ளை

(வைப்பக படம்)

அதிகாலை வேளையில் சம்பவம்

வீடு ஒன்றில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு உடையார்கட்டுப் பகுதியில் இன்று (31) அதிகாலை 2.00 மணியளவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள் நுழைந்த முகமூடி அணிந்த இருவர் வீட்டில் தனித்திருந்த 62 வயது கணவன் - மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை அச்சுறுத்தி கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் போது கொள்ளையர்களால்  வீட்டில் வைத்திருந்த 55 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் என்பன எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டைப் பொலிஸாருடன் இணைந்து யாழ்ப்பாணம் குற்றத்தடவியல் பொலிஸ் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணைகளைமுன்னெடுத்தனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...