கிளிநொச்சியில் கிணறு துப்புரவு நடவடிக்கையில் பிரதியமைச்சர் தெவரப்பெரும | தினகரன்

கிளிநொச்சியில் கிணறு துப்புரவு நடவடிக்கையில் பிரதியமைச்சர் தெவரப்பெரும

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் கிணறுகள் அனைத்தும் கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. இதனால் சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று பரந்தன் பகுதியிலுள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

(நமது நிருபர்)


Add new comment

Or log in with...