Friday, March 29, 2024
Home » NCE ஏற்றுமதி விருதுகளில் மகத்தான வெற்றியைப் பெற்ற மல்டிலக் குழுமம்

NCE ஏற்றுமதி விருதுகளில் மகத்தான வெற்றியைப் பெற்ற மல்டிலக் குழுமம்

by mahesh
December 13, 2023 6:50 am 0 comment

இரசாயன ஏற்றுமதி கைத்தொழில் துறையில் கூடுதல் பாரிய பிரிவில் மதிப்புமிக்க தங்க விருதை மல்டிலக் குழுமம் வென்றெடுள்ளது. தேசிய ஏற்றுமதி சம்மேளனம் 31ஆவது வருடமாக கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இவ்விருது வழங்கும் வைபவத்தில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சிமர் மில்பர் இதற்கான விருதைப் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம்

‘இவ்விருதானது மல்டிலக் குழுமத்திற்கு பெருமை சேர்ப்பதோடல்லாமல் இந்நாட்டை வர்ணப்பூச்சு ஏற்றுமதி செய்யும் நாடாக மேம்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள மக்ஸன் குழும முகாமைத்துவ பணிப்பாளர் மிஸ்வர் மக்கீன்,

மல்டிலக் குழுமத்தின் சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான உற்சாகத்தை அளித்துள்ளது. எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிலையானதும் அழகானதுமான வர்ணப்பூச்சுகளை உருவாக்குவதற்கான ஆர்வம் என்பன இத்தொழில்துறையில் எம்மை தனித்துவமிக்கவர்களாக திகழச் செய்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT