Thursday, March 28, 2024
Home » இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவு

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவு

- இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை விருத்தி செய்ய அர்ப்பணிப்பதாக தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 12, 2023 4:50 pm 0 comment

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அண்மையில் (07) தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமா ஜீனா இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காஸிம், ராஜிகா விக்ரமசிங்க, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய செயலாளராகவும், செல்வம் அடைக்கலநாதன் உதவிச் செயலாளராகவும், இஷாக் ரஹுமான் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபித்தல் இந்நாட்டின் நெருங்கிய நட்பு நாடான மாலைதீவுடன் காணப்படும் நட்புறவை விருத்தி செய்வதற்கு உதவும் என இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற எஸ்.எம்.எம். முஷாரப் குறிப்பிடுகையில், நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கை – மாலைதீவு தொடர்புகளை விருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT