பாடசாலை காதல்; புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி | தினகரன்

பாடசாலை காதல்; புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி

பாடசாலை காதல்; புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி-School Love-Suicide-18Yrs Old Men-13 Yrs Old Women Jumped in to a Train

அநுராதபுரம் புளியங்குளம் புகையிரதக் கடவைக்கு அருகில் புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து இளைஞன் ஒருவரும், மாணவி ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இன்று (27) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து, இவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

காதல் விவகாரமே இதற் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி ஒரு சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை விடுமுறை தினம் என்பதால், குறித்த இளைஞனின் வீட்டுக்கு அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, படுகாயமடைந்த குறித்த மாணவி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், சமகிபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சுப்புன் சின்தக மற்றும் அக்குரஸ்ஸை, தியலபே பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மதாரா மல்ஷானி ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

குறித்த இருவரினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...