தலவாக்கலையில் ஆணின் சடலம் மீட்பு | தினகரன்

தலவாக்கலையில் ஆணின் சடலம் மீட்பு

தலவாக்கலையில் ஆணின் சடலம் மீட்பு-Men's Body Found at Talawakelle

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று (27) காலை 6.00 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சென்ற பாதசாரிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...