கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை செல்ல முற்பட்ட 7 பேர் கைது | தினகரன்


கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை செல்ல முற்பட்ட 7 பேர் கைது

கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை செல்ல முற்பட்ட 7 பேர் கைது-7 Arrested-Brought Kerala Ganja to Adam's Peak

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 7  இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேரும் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் பகுதியில் நேற்று (25) காலை 11.00 மணிமுதல் இரவு வரை வாகனங்களை சோதனை  செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களை இன்றைய தினம் (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...