ஆற்றில் நீராடசென்ற 13, 42 வயதுடைய இருவர் பலி | தினகரன்

ஆற்றில் நீராடசென்ற 13, 42 வயதுடைய இருவர் பலி

ஆற்றில் நீராடசென்ற 13, 42 வயதுடைய இருவர் பலி-Nawalapitiya Inguru Oya Galaboda Oya-Drown-13Yr and 42 Yr Dead

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குறு ஓயா, மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஹட்டன் விஜிராபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் குறித்த மாப்பாகந்த ஆற்றில் நிராட சென்ற குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஆற்றில் நீராடசென்ற 13, 42 வயதுடைய இருவர் பலி-Nawalapitiya Inguru Oya Galaboda Oya-Drown-13Yr and 42 Yr Dead

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துர் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முக்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பலியான இருவரின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)


Add new comment

Or log in with...