மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு | தினகரன்

மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு

மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு-Mahinda Resigns Tomorrow

மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் (15) தனது பதவியை துறக்கவுள்ளதாக, அவரது புதல்வரான நாமல் ராஜபக்ச அவரது ட்விற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நாளைய தினம் நாட்டு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்து விட்டு, மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகவுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு-Mahinda Resigns Tomorrow

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கையை தொடருவார் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு-Mahinda Resigns Tomorrow

இரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பதவி வகிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அப்பதவியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில் வகிக்காத பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் என, ஐக்கிய ஐக்கிய தேசிய கட்சி தனது ட்விற்றர் தளத்தில் அறிவித்துள்ளது.

மஹிந்த பதவியை விட்டு செல்வதாக அறிவிப்பு-Mahinda Resigns Tomorrow

Add new comment

Or log in with...