Friday, April 19, 2024
Home » தபால் ஊழியர்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

- பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பொதுமக்கள்

by Prashahini
December 11, 2023 4:45 pm 0 comment

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(11) தொடர்கின்றது.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் இந்த வேலைநிறுத்தத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என அவர் கூறினார்.

நாடளாவிய ரீதியில் நேற்று (10) மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (12) வரை தொடரவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT