பாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று | தினகரன்

பாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று

பாராளுமன்ற கலைப்பு; தீர்ப்பு இன்று-Parliament Dissolved FR Petirion Supreme Court Judgement Today

பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (13) பிற்பகல் 4.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த நவம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட 2096/70 எனும் அதி விசேட வர்த்தமானி, அறிவித்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு கடந்த நவம்பர் 13 ஆம் திகதி பிரதம நீதியரசர் நலின் பெரேரா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த வர்த்தமானி எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அவ்வழக்கு விசாரணை தொடர்பில் சட்ட மா அதிபர் நலின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்றூ, விஜித மலல்கொட, முர்து பெனாண்டோ ஆகிய ஏழு பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (13) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...