எங்களது அரசில் குறைபாடுகள் இருந்தன | தினகரன்

எங்களது அரசில் குறைபாடுகள் இருந்தன

இரு கட்சிகளின் முரண்பாடுகளே இதற்குக் காரணம்

தமது அரசாங்கத்தில் பல குறைபாடுகள் இருந் ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளினதும் கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்த அவர், அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிக மந்தமாக இடம்பெற்றதாகவும் சபையில் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் துறையில் பெரும் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற் படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்று கையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி ய அவர்;

ஒக்டோபர் 26 இல் இடம்பெற் சூழச்சியைத் தோல்வியுறச் செய்வதற்கான இந்த பிரேரணையில் விவாதித்தவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...