Home » VAT திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை எடுக்க வாக்கெடுப்பு

VAT திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை எடுக்க வாக்கெடுப்பு

- ஆதரவு: 92 வாக்குகள்; எதிர்ப்பு: 41 வாக்குகள்; ஒருவர் வாக்களிக்கவில்லை

by Prashahini
December 11, 2023 11:11 am 0 comment

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், இன்று (11) பிற்பகல் VAT (திருத்தம்) சட்டமூலத்தை விவாதிப்பதற்கான யோசனை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VAT (பெறுமதி சேர் வரி) திருத்தச் சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவிருந்த போதிலும், போதிய உறுப்பினர்கள் இன்மையால் சபை நடவடிக்கைகள் இன்று (11) வரை ஒத்திவைக்கப்பட்டது.

போதிய உறுப்பினர்கள் இன்மையால் பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க ஆகிய அமைச்சர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்து அதற்கான சட்டமூலம் இன்று (11) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று (11) பாராளுமன்றம் கூடிய போது, VAT திருத்தச் சட்டமூலத்தை விவாதிப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தநிலையில், பாராளுமன்றத்தில் அதனை விவாதிப்பதற்கு சபாநாயகரால் வாக்கெடுப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT