Home » போர் நிறுத்தத்தை கொண்டுவர குட்டரஸ் முயற்சி

போர் நிறுத்தத்தை கொண்டுவர குட்டரஸ் முயற்சி

- ஐ.நா. தவறியதற்கு வருத்தம் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 11, 2023 11:54 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவர ஐ.நா பாதுகாப்புச் சபை தவறியதற்கு வருத்தத்தை தெரிவித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், பாதுகாப்புச் சபை முடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் நடைபெறும் டோஹா மாநாட்டில் உரையாற்றிய குட்டரஸ், பாதுகாப்புச் சபையின் அதிகாரம் மற்றும் திறன் குறைமதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியதோடு, ‘நான் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்’ என்றும் உறுதி அளித்தார். காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் மீதே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. அந்தத் தீர்மானம் அபாயகரமான மற்றும் யதார்த்தபூர்வமற்றது என்று அது கூறியது.

ஐ.நா சானத்தில் தனக்கு இருக்கும் விசேட அதிகாரத்தை பயன்படுத்தியே குட்டரஸ் போர் நிறுத்த தீர்மானத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுவந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT