மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கடிதம் | தினகரன்

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கடிதம்

மத்திய பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பெரும்பான்யை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸுக்கு சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததால் போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. முதல்வர் சிவராஜ் சிங்கும் பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மதியம் ஆளுநரை சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத், “காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது” என்றார்.


Add new comment

Or log in with...