ரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம் | தினகரன்

ரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்

ரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்-Confidence Motion on Ex PM Ranil Passed with 117 Votes

- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும்  பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததோடு, மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய  தலைமையில் கூடியது.

இதன்போது சஜித் பிரேமதாஸவினால் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் அது வழி மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...