ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமா | தினகரன்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமா

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. வராகடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வரும் வங்கிகளிடம் காட்டப்பட்டு வரும் கெடுபிடியை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் உள்ள பல இலட்சம் கோடி ரூபாயை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.

ஒக். 27 ம் திகதி ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரல் ஆசாரியா' ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள் மிக விரைவில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்' என விமர்சனம் செய்தார். இதன் மூலம் ரிசர்வ் வங்கி மத்திய அரசு இடையே மோதல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சூழ்நிலையில் நவம்பர் 19ம் திகதி ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டம் நடந்தது. இதன் பின் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவே கூறப்பட்டது.

இச்சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...