100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல் | தினகரன்

100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல்

கிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு 100 அமெரிக்க குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை அமெரிக்கா கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா இதற்கான உண்மையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் வீடு திரும்புவதற்கான நம்பிக்கை இல்லை.

கடத்தப்பட்ட அமெரிக்க குழந்தைகள் திரும்பும் வரை இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். டிரம்ப் நிர்வாகமானது தற்போதைய சட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாக பயன்படுத்த வேண்டும், அமெரிக்க குழந்தைகளை தங்கள் குடும்பங்களிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

கோல்டன்மேன் சட்டத்தின் குறிப்பிடத்தக்க தடைகளை அரச செயலாளர் பயன்படுத்த வேண்டும். டிரம்ப் நிர்வாகம், ஹேக் உடன்படிக்கை, இருதரப்பு உடன்படிக்கைகள் மற்றும் கோல்ட்மேன் சட்டத்தில் விவரிக்கப்பட்ட செயல்களுடன் கடத்தப்பட்ட குழந்தைகள் திரும்புவதற்கு ஒத்துழைப்பிற்கான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பது சிறந்தது என்று நான் நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.


Add new comment

Or log in with...