50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி | தினகரன்

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

இங்கு சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கத்தில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சந்திரசேகர ராவ் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி 2ம் இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் அகுல விஜயா நான்காம் இடத்திற்கு பின்தங்கினார்.


Add new comment

Or log in with...