விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் | தினகரன்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

இன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிக்கும் பொறுப்பை, சபையிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றம் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி முதல் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைகளை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. நேற்றைய தினம் (13) உச்ச நீதிமன்றில் இவ்வாறு உத்தரவிட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாராளுமன்றம் கூட்டப்படும் திகதியாக இன்றைய தினம் (14) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றம் இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...