Home » நிர்மாணத்துறை ஒப்பந்ததாரருக்கு இம்மாத இறுதிக்குள் ரூ.199 கோடி

நிர்மாணத்துறை ஒப்பந்ததாரருக்கு இம்மாத இறுதிக்குள் ரூ.199 கோடி

- கொவிட் 19, பொருளாதார நெருக்கடிகளினால் தடைப்பட்ட கொடுப்பனவுகள் துரித கதியில்

by Rizwan Segu Mohideen
December 11, 2023 8:28 am 0 comment

கொவிட்19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் செலுத்த முடியாதிருந்த 1,989.75 மில்லியன் ரூபா பணம் இந்த மாதம் 31 திகதிக்கு முன்னர் செலுத்தப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

செயலாளர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இதன்படி, இது தொடர்பான கொடுப்பனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கேற்ப நிலுவைத் தொகைகளை செலுத்துவதை நிறைவு செய்யும்.இதேவேளை, நிர்மாணத்துறைக்காக தனியான அபிவிருத்தி வங்கியொன்றை நிறுவுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

திறைசேரிக்கு இந்த யோசனை சம்பந்தமாக எண்ணக்கருப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் புதிய வங்கி ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT